கருணாநிதி தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்த வரலாற்றை மக்கள் மறக்க மாட்டார்கள்:அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பேச்சு

கருணாநிதி தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்த வரலாற்றை மக்கள் மறக்க மாட்டார்கள்:அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பேச்சு

திங்கள் , பெப்ரவரி 15,2016,

திமுக தலைவர் கருணாநிதி தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்த வரலாற்றை மக்கள் மறக்க மாட்டார்கள். வாய்ஜாலத்தில் மக்களை ஏமாற்றி வருகிறார் கருணாநிதி என தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.

கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா 68-வது பிறந்தநாளை முன்னிட்டு காட்டுமன்னார்கோயிலில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் இரவு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி தலைமை வகித்தார். காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன் வரவேற்றார்.

விழாவில் தமிழக வீட்டு வசதி துறை மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கள் பங்கேற்ற ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், பித்தளை சலவைப்பெட்டி,  சைக்கிள்,. பித்தளை குடம், பித்தளை தவளை, விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான், குத்துவிளக்கு மற்றும் வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 10,068 பேருக்கு வழங்கிப் பேசினார்.

அவர் பேசியது: அண்ணா மறைந்தவுடன் எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களை ஏமாற்றி முதல்வரானவர் கருணாநிதி. 1969-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி திட்டங்கள் நிறைவேற்ற நிதி இல்லை. எனவே பூரண மதுவிலக்கை ஏன் ரத்துச்செய்யக்கூடாது என யோசித்து வருவதாக கூறினார். ஆனால் மத்தியில் ஆளும் அரசுடன் இனக்கத்துடன் இருந்த கருணாநிதி ஏன் நிதி பெறவில்லை. பின்னர் 1971-ல் மதுவிலக்கை ரத்து செய்தவர் கருணாநிதி. ஆனால் தற்போது மதுவிலக்கை கொண்டு வருவேன் என மக்களை ஏமாற்றி வருகிறார். மதுவிலக்கை பற்றி பேச அவருக்கு தகுதி கிசையாது. காங்கிரஸை எதிர்த்து அண்ணா திமுகவை தொடங்கினார். அண்ணாவிற்கு பிறகு அதே காங்கிரஸோடு கூட்டுவைத்தவர் கருணாநிதி. காவிரி நதி நீர் பிரச்சனையில் 2007-ல் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்தது. அதனை கருணாநிதி அமல்படுத்த எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா 2013-ம் ஆண்டு பிப்.19-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து காவிரி நதி நீர் உரிமையை மத்தியஅரசிழில் வெளியிட உத்தரவு பெற்றார். எனவே காவிரி நீர் பிரச்சனையை பற்றி பேச கருணாநிதிக்கு எந்த உரிமையும் கிடையாது. கச்சத்தீவை இலங்கைக்கு இந்திராகாந்தி தாரை வார்த்து கொடுத்த போது எவ்வித எதிர்ப்பும் தெரிவிகாமல் விட்டு கொடுத்தவர் கருணாநிதி. அதேபோன்று 2006-ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்கி வைக்கலாம் என தீர்ப்பு வந்த போது 5 வருடமாக முதல்வராக இருந்த கருணாநிதி எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 2011-ல் மத்தியஅரசு காட்சி பட்டியலில் ஜல்லிக்கட்டு பசுக்கள் பற்றி சேர்த்த போது கருணாநிதி தமிழகத்தில் முதல்வராகவும், மத்தியில் ஆட்சியிலும் இருந்திருந்தார். அதனை தடுக்கவில்லை. தடுத்திருந்தால் தற்போது உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்காது. எனவே தமிழக உரிமை பற்றி பேச கருணாநிதிக்கு அருகதை கிடையாது. மாநில உரிமைக்காக தன்னையே தியாகம் செய்து போராடி வருபவர் ஜெயலலிதா. மக்களுக்காக அர்ப்பணித்து தியாக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஜெயலலிதா என அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.

தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது: ஸ்டாலின் விடியல் மீட்பு பயணம் காலம் கடந்த பயணம். பொய்த்து போன பயணமாகிவிட்டது. மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற கருணாநிதியின் கனவு பலிக்காது. 2016 தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும். குறிஞ்சிப்பாடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தோற்பது உறுதி. ஜெயலலிதாவின் செயல்திட்டங்கள், அவர்களுக்கு முடிவு கட்டும். பாமகவின் மாற்றம், முன்னேற்றம், ஏமாற்றமாக முடியும். அன்புமணியின் மீது சிபிஐ வழக்கு உள்ளது. மக்கள் நலக்கூட்டு இயக்கம. எடுபடாத கூட்டு இயக்கம். விஜயகாந்திற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி, ஜெயலலிதா கொடுத்த பிட்சையாகும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, செல்வி ராமஜெயம் எம்எல்ஏ, முன்னாள் எம்பி பு.தா.இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சொ.ஜவகர், மாவட்ட மருத்துவ அணை செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், ஒன்றியக்குழுக் தலைவர்கள் கே.ஏ.பாண்டியன் (குமராட்சி), கே.மணிகண்டன் (காட்டுமன்னார்கோயில்), கே.அசோகன் (பரங்கிப்பேட்டை), வி.ஆர்.ஜெயபாலன் (கீரப்பாளையம்), காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி தலைவர் எம்ஜிஆர் தாசன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முடிவில் காட்டுமன்னார்கோயில் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஏ.பாலமுருகன் நன்றி கூறினார்.