கருணாநிதி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு – கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வலியுறுத்தல்

கருணாநிதி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு – கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வலியுறுத்தல்

வியாழன்,நவம்பர்,26-2015

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது முதலமைச்சர் சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் திரு. எம்.எல். ஜெகன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று 2 மனுக்களை தாக்கல் செய்தார். கடந்த 21ம் தேதி முரசொலி நாளிதழில் கருணாநிதி எழுதியிருந்த கேள்வி-பதில் பகுதியில், முதலமைச்சர் குறித்தும், தமிழக அரசு பற்றியும் அவதூறாக கருத்து தெரிவித்திருந்தார். இது, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மற்றும் தமிழக அரசின் புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், கருணாநிதி முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோரை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

மற்றொரு மனுவில், நவம்பர் 25ம் தேதியிட்ட ஆனந்த விகடன் வார இதழில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறித்து அவதூறாக கட்டுரை வெளியிட்ட அதன் ஆசிரியர் கண்ணன், பதிப்பாளர் மாதவன் ஆகியோரை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.