கருணை உள்ளம் படைத்தவர் முதல்வர் ஜெயலலிதா:நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமிதம்

கருணை உள்ளம் படைத்தவர் முதல்வர் ஜெயலலிதா:நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமிதம்

ஞாயிறு, ஜனவரி 03,2016,

சென்னை : மக்கள் நலன் அறிந்து கேட்காமலேயே கொடுக்கின்ற முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான் என்று செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்கே.டி.ராஜேந்திரபாலாஜி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அணில் திருமண மண்டபத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்.சி.முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 167நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகைபெறுவதற்கான ஆணைகளையும், 76 நபர்களுக்கு ரூ.76 ஆயிரம் மதிப்பில் இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 3 நபர்களுக்கு ரூ.3 ஆயிரம் மதிப்பில் இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 5 நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பில்மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 4 நபர்களுக்கு ரூ.4 ஆயிரம் மதிப்பில்விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 4 நபர்களுக்குரூ.4 ஆயிரம் மதிப்பில் கணவனால்கைவிடப்பட்டோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 1 நபருக்கு ரூ.1000 மதிப்பில் முதிர்கன்ன உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 500 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் ஆகமொத்தம் 760 நபர்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தி மற்றும்சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கி பேசியதாவது: முதலமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய, பாட்டாளி, இல்லாத மக்கள் தங்கள்வாழ்க்கைத்தரத்தினை முன்னேற்றுகின்ற வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்குகின்ற திட்டம் அது இல்லத்தரசிகளின் இன்னல்களைப் போக்குகின்றதிட்டம், விலையில்லா மடிக்கணினி வழங்குகின்ற திட்டம் ஏழை எளிய மாணவர்கள் உலகளாவிய கல்விஅறிவினைப் பெறுகின்ற திட்டம், விலையில்லா கறவை மாடுகள், விலையில்லா வௌ;ளாடுகள், செம்மறிஆடுகள் வழங்குகின்ற திட்டம் அது ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கான திட்டம் எஏழை, எளிய மக்களுக்காக பல திட்டங்களை திட்டி செயல்படுத்தி வருகிறார் ஆதரவற்ற முதியோர்கள் தனக்கு ஆதரவு இல்லை என எண்ணிய போது. உங்களுக்காக நான்இருக்கிறேன் என தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா முதியோர்உதவித்தொகையினை ரூ.500-லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கி வருகிறார்கள்.

முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தான் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்த உடனேபுதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. புதிய குடும்ப அட்டை கோரி தொடர்புடைய ஆவணங்களுடனவிண்ணப்பம் செய்தால் உடனே மாவட்ட நிர்வாகம் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மனுக்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.ஏழை, எளிய தாய்மார்கள் பயன்பெறுகின்ற வகையில் 1 கோடியே 85 லட்சம் தாய்மார்களுக்குவிலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறியினை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி உத்தரவிட்டு வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் 90 சதவீதம் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இம்மாதஇறுதிக்குள்ளாகவே தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும். முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்திலே கனமழையினால் வெள்ளம் என்று உடனே அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அழைத்து சம்மந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் அனுப்பிநிவாரணப்பணிகளை உடனே மேற்கொண்டதன் பயனாக பெருமளவு வௌளச் சேதம் மற்றும் உயிரிழப்புகள்ஏற்படாமல் தடுக்கபட்டுள்ளது. மழைவௌ;ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அதிகம் பாதிப்படைந்த மக்களுக்கு உடனடியாக வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவழங்கப்பட்டு வருகிறது. மக்களின் நலன் அறிந்து அவர்கள் கேட்காமலேயே கொடுக்கின்ற முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும். என செய்து மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

இவ்விழாவில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிதுணைத்தலைவர் எஸ்.ஜி.சுப்பிரமணியன், சிவகாசி ஒன்றியக்குழுத் தலைவர்.சி.சுப்பிரமணியன்,சிவகாசி நகர்மன்ற துணைத்தலைவர் அசன்பதுருதீன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வி.ஆர்.கருப்பசாமி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர்; கலந்து கொண்டனர்.