கலாம் சாட்’ தயாரித்த மாணவர் குழுவுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

கலாம் சாட்’ தயாரித்த மாணவர் குழுவுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

ஜூலை ,13 ,2017 ,வியாழக்கிழமை, 

சென்னை : கலாம் சாட் என்ற பெயரில் மிகச்சிறிய செயற்கைக்கோளை உருவாக்கிய கரூர் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரிஃபாத் சாருக் தலைமையிலான மாணவர் குழுவினருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வ‌ழங்கினார்.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த மாணவர் திரு. ரிஃபாத் சாருக் தலைமையிலான ஆறு மாணவர்கள் கொண்ட குழு 64 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய செயற்கைக்கோளை உருவாக்கினர். அவர்கள் உருவாக்கிய இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “நாசா” நடத்திய போட்டியில் கலந்து கொண்டு, முதல் பரிசு பெற்றது.

இந்த செயற்கைக்கோள் கடந்த 22.6.2017 அன்று விண்ணில் “கலாம் சாட்”” என்ற பெயரில் “”””நாசா”” ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. இந்த சாதனையை படைத்து, இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு பெருமைத் தேடித் தந்த மாணவர் திரு.ரிஃபாத் சாருக் தலைமையிலான மாணவர்கள் – திரு.யக்னா சாய், திரு.வினய் பரத்வாஜ், திரு.தனிஷ்க் திவேதி, திரு.கோபிநாத் மற்றும் திரு.முகம்மது அப்துல் காசிப் ஆகியோருக்கு மேலும் இதுபோன்ற பல சாதனைகளை செய்ய ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி புதங்கிழமை தலைமைச் செயலகத்தில், இச்சாதனை படைத்த திரு.ரிஃபாத் சாருக் தலைமையிலான மாணவர் குழுவினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை ஊக்கத்தொகையாக வழங்கி, அம்மாணவர்களை பாராட்டினார்கள்.