கலைவாணர் அரங்கத்தை, முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்ததையடுத்து, கலைவாணர் குடும்பத்தினர் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி

கலைவாணர் அரங்கத்தை, முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்ததையடுத்து, கலைவாணர் குடும்பத்தினர் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி

செவ்வாய், பெப்ரவரி 16,2016,

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், சுமார் 63 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள கலைவாணர் அரங்கத்தை, முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்ததையடுத்து, கலைவாணர் குடும்பத்தினர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இருந்த கலைவாணர் அரங்கம், முந்தைய தி.மு.க ஆட்சியில் இடிக்கப்பட்டது – இதனையடுத்து, காலியாக உள்ள அந்த இடத்தில், அ.இ.அ.தி.மு.க. அரசு, பிரம்மாண்டமான கலை அரங்கம் கட்டப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், ஒரு லட்சத்து 92 ஆயிரம் சதுர அடி கட்டட பரப்பளவில், 62 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பிரம்மாண்டமான முறையில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிதாக கட்டப்பட்டுள்ள கலைவாணர் அரங்கத்தை, முதலமைச்சர்  ஜெயலலிதா, நேற்றுமுன்தினம் திறந்து வைத்தார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் நினைவைப் போற்றும் வகையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த கலை அரங்கத்தை உருவாக்கியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.