கழகத்திற்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட பழ.கருப்பையா கட்சியிலிருந்து நீக்கம்:முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

கழகத்திற்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட பழ.கருப்பையா கட்சியிலிருந்து  நீக்கம்:முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

வியாழன் , ஜனவரி 28,2016,

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துறைமுகம் சட்டப் பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெ.ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்களும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வட சென்னை தெற்கு மாவட்டச் சேர்ந்த பழ.கருப்பையா (துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.