கவர்னர் ரோசய்யாவுக்கு முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து : வாழ்த்து தெரிவித்த முதலமைச்சருக்கு ஆளுநர் நன்றி

கவர்னர் ரோசய்யாவுக்கு முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து : வாழ்த்து தெரிவித்த முதலமைச்சருக்கு ஆளுநர் நன்றி

செவ்வாய், ஜூலை 05,

சென்னை : கவர்னர் ரோசய்யாவின் 83-வது பிறந்த நாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா அவருக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவர் வாழ்த்து தெரிவித்தார். 

தமிழ்நாடு கவர்னர் ரோசய்யா நேற்று தனது 83-வது பிறந்தநாளை ராஜ்பவனில் கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா, மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.  அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது.,

தங்களது 83-வது பிறந்தநாளான இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவையாற்றுவதற்காக, சிறந்த உடல் நலத்துடனும், அமைதியுடனும் பல்லாண்டுகள் வாழ, இறைவன் அருள்புரிய வேண்டும் என தாம் பிரார்த்திக்கிறேன்.  இவ்வாறு  முதல்வர் ஜெயலலிதா, கவர்னருக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் ஜெயலலிதா, கவர்னர் ரோசய்யாவை  தொலைபேசியில் நேற்று  தொடர்பு கொண்டு, வாழ்த்துகளை தெரிவித்து, தமது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டார். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கவர்னர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.