கவர்னர் வித்யாசாகர் ராவுடன் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மீண்டும் சந்திப்பு

கவர்னர் வித்யாசாகர் ராவுடன் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மீண்டும் சந்திப்பு

வியாழக்கிழமை, பிப்ரவரி 16, 2017,

சென்னை : முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் சென்னை ராஜ்பவனில் நேற்று மீண்டும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர்.

நேற்றிரவு 8.45 மணிக்கு பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநரை சந்தித்தார். ஆளுநரிடம் ”பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்” என்ற கோரிக்கையை ஓபிஎஸ் முன்வைத்தார். அதற்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் இருந்து ஓபிஎஸ் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், விரைவில் ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.