காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணியின் கணவர் மறைவுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணியின் கணவர் மறைவுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

திங்கள் , மார்ச் 07,2016,

காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.விஜயதரணியின் கணவர் சிவகுமார் கென்னடியின் மறைவுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட இரங்கல் கடிதத்தில், “சிவகுமார் கென்னடி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன். இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் வழங்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். சிவகுமார் கென்னடியை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.