காஞ்சிபுரத்தில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

காஞ்சிபுரத்தில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

ஆகஸ்ட் 30, 2017 ,புதன்கிழமை,

சென்னை : காஞ்சிபுரத்தில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் இன்று வண்டலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவில்,எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்து 75 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றுகிறார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி காஞ்சிபுரம் பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.