காஞ்சிபுரத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட் 5 ஆயிரம் பேருக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள்

காஞ்சிபுரத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட் 5 ஆயிரம் பேருக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள்

ஞாயிறு, டிசம்பர் 06,2015,

 

காஞ்சிபுரத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் பேருக்கு ஜெயலலிதா பேரவை சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. அதிமுக மாவட்ட செயலரும், உத்தரமேரூர் எம்எல்ஏவுமான வாலாஜாபாத் கணேசன் பங்கேற்று உதவிப் பொருள்களை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள முகாமிலும், காமாட்சி காலனி பகுதியில் உள்ள முகாமிலும் தங்கியிருக்கும் 5,000 உணவுப் பொருள்கள், துணிகள், பாய், போர்வை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ மொளச்சூர் பெருமாள், காஞ்சிபுரம் நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்டேர் பங்கேற்றனர்.