காமராஜரின் கனவு திட்டமான ராமநதி, ஜம்புநதி கால்வாய் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உடனடியாக ரூ.5 கோடியே 40 லட்சம் ஒதுக்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு போராட்டக்குழு நன்றி

காமராஜரின் கனவு திட்டமான ராமநதி, ஜம்புநதி கால்வாய் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உடனடியாக ரூ.5 கோடியே 40 லட்சம் ஒதுக்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு போராட்டக்குழு  நன்றி

திங்கள் , பெப்ரவரி 29,2016,

பாவூர்சத்திரம்;

ராமநதி ஜம்பு நதி இணைப்பு கால்வாய் போராட்டக்குழு ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் நடந்தது.

ராமநதி, ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு நிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதுடன், திட்டப்பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று போராட்டகுழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

போராட்டக்குழு தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். பொருளாளர் தனராஜ், துணை செயலாளர் செல்வராஜ், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராமஉதயசூரியன் வரவேற்று பேசினார். போராட்டக்குழு அமைப்பாளர் டாக்டர் தர்மராஜ் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–

முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் கனவு திட்டமான ராமநதி, ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற ரூ.42 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து சட்டசபையில் அறிவித்து, உடனடியாக ரூ.5 கோடியே 40 லட்சம் ஒதுக்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது.

திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருந்து திட்ட அறிக்கை தயார் செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பது. இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். திட்டப்பணிகளை அரசு உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.