அரசு இ-சேவை மையங்களில் கூடுதல் சேவைகள் தொடக்கம்:தமிழக அரசு புதிய அறிவிப்பு

அரசு இ-சேவை மையங்களில் கூடுதல் சேவைகள் தொடக்கம்:தமிழக அரசு புதிய அறிவிப்பு

சனி, மார்ச் 05,2016,

அரசு இ சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் போலீஸ் புகார்களையும் வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  இது குறித்து அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் மேலாண் இயக்குனர் குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு அரசு இ-சேவை மையங்களில் கூடுதல் சேவைகள் துவக்கம் தமிழ்நாடு அரசு தமிழகம் முழுவதும் அரசு இ-சேவை மையங்களை அமைத்து, அரசின் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இச்சேவை மையங்களில் தற்பொழுது கூடுதலாக கீழ்க்காணும் சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

1. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறும் வசதி.2. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுவை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியும் ஏற்கெனவே பதிவு செய்த மனுவின் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ளும் வசதி. 3. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தொடர்பான சேவைகள். பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான புகார்களைத் தனியாகவும், பொது விநியோகத் திட்டம் அல்லாத புகார்களை தனியாகவும் புகார் மனு பதிவு செய்யும் வசதியும், பதிவு செய்துள்ள புகார் மனு தொடர்பான தற்போதைய நிலையையும் தெரிந்துகொள்ளும் வசதி.

4. பயிற்சி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு நேர்காணலுக்கான தேதி தெரிந்துகொள்ளும் வசதி. 5. பதிவுத்துறையின் சேவைகளான பத்திரப்பதிவுக்கான முன் அனுமதி நாள் பதிவு செய்துகொள்ளும் வசதியும், திருமணம் செய்துகொள்வதற்கு முன் அனுமதி நாள் பெற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.6. காவல் துறையின் சேவைகள் – புகார்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி. புகார்மனு தொடர்பான தற்போதைய நிலை தெரிந்துகொள்ளும் வசதி, முதல் புலனாய்வுஅறிக்கை, தொலைந்துபோன வாகனம் தொடர்பான தகவல் தெரிந்துகொள்ளும் வசதி.

மேலே தெரிவிக்கப்பட்டுள்ள சேவைகள் அரசு இ-சேவை மையங்களில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு இ-சேவைமையங்களுக்குச் சென்று அரசின் சேவைகளைப் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.