கிராமங்களின் பொருளாதாரத்தை முன்னேற்றியவர் ‎முதலமைச்சர்‬ ஜெயலலிதா:‬மதுரையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்

கிராமங்களின் பொருளாதாரத்தை முன்னேற்றியவர் ‎முதலமைச்சர்‬ ஜெயலலிதா:‬மதுரையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்

திங்கள் , பெப்ரவரி 01,2016,

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இதில் மதுரை மாநகர், புறநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன், சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை தவிர்த்து, சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா. பல்வேறு தொலை நோக்கு திட்டங்களை கொண்டு வந்து மக்களின் நலன் காத்தவர்.
வீடுகள் தோறும் கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, கறவை மாடுகள், ஆடுகள் உள்ளிட்டவற்றை வழங்கி கிராம பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றவர் முதல்வர் ஜெயலலிதா. இந்த அரசில் 37 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மாணவர்களின் நலன் காக்க மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. கல்விக்காக மட்டும் ஏராளமான நிதியை ஒதுக்கி மாணவர் சமுதாயத்தை பாதுகாப்பவர் முதல்வர் ஜெயலலிதா. நகரங்கள் தோறும் அ.தி.மு.க.வின் பெருமைகளை கூறுவதோடு பட்டி தொட்டி எங்கும் அரசின் பெருமையை கொண்டு செல்ல வேண்டும். மேலும் எதிர்கட்சிகள் கூறுகின்ற விமர்சனங்கள், தவறான கருத்துகளை முறியடிக்க வேண்டும். அ.தி.மு.க.வில் தான் மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜு பேசும் போது, அ.தி.மு.க. அரசு மட்டுமே அறிவிக்காத திட்டங்களையும் மக்களுக்காக செயல்படுத்தி உள்ளது. வருகிற தேர்தலிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்- அமைச்சராவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்களை வஞ்சித்த மற்ற கட்சிகளை மக்கள் எதிர்க்க வேண்டும். தற்போது தகவல் தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் காரணமாகவே அ.தி.மு.க.விலும் தகவல் தொழில் நுட்பப்பிரிவு என்று ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.வினர் வாட்ஸ் அப் மூலம் அரசின் சாதனைகளை வீடு வீடாக கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில், மேயர் ராஜன் செல்லப்பா, எம்.பி. கோபால கிருஷ்ணன், டெல்லி பிரதிநிதி ஜக்கையன், எம்.எல்.ஏக்கள் ஏ.கே.போஸ், முத்துராமலிங்கம், கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.