கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு:9 ஆயிரத்து 12 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு:9 ஆயிரத்து 12 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

வெள்ளி, ஜனவரி 08,2016,

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து இரண்டாம் போக சாகுபடிக்காக,வெள்ளிக்கிழமை(ஜன.8) முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9,012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து, இரண்டாம் போக சாகுபடிக்காகத் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து இரண்டாம் போக சாகுபடிக்காக வெள்ளிக்கிழமை(ஜன.8) முதல் தண்ணீர் திறந்து விட தாம் ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கப் பாசன அமைப்பின்கீழ் உள்ள 9,012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.