கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு பாராட்டு விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு பாராட்டு விழா

வெள்ளி, நவம்பர் 25,2016,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் தலைமையில்  பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றி சிறந்த மாணவ-மாணவிகளை உருவாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களை பாராட்டி தங்க நாணயம் பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், மாணவர்கள் கல்வித்தரத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், செல்ஃபோன் உபயோகத்தை தவிர்க்க வேண்டும் என்றும், எனவே, இன்று முதல் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் செல்ஃபோன் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.