கிருஷ்ண ஜெயந்தி திருநாள் : ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தி திருநாள் : ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

ஆகஸ்ட் 14 , 2017 , திங்கட்கிழமை, 

சென்னை : கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் ஓ.பன்னீர்செல்வம் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ‘கிருஷ்ண ஜெயந்தி’ வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

இரணியனை அழிக்க நரசிம்மனாகவும், ராவணனை அழிக்க ராமனாகவும், கம்சனை அழிக்க ஸ்ரீ கிருஷ்ணனாகவும் திருமால் அவதாரம் எடுத்தது ஆன்மிக வரலாறு. ஸ்ரீ கிருஷ்ணர் துரியோதனனை அழித்து தர்மத்தை நிலை நாட்டியது மகாபாரதம் கூறும் வீர வரலாறு. அந்த வரலாறுகளை உருவாக்கவும், அதர்மத்தை அழிக்கவும், ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் அவதரித்த புனிதநாளை இந்துக்கள் கிருஷ்ண ஜெயந்தி விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

அண்ணலை நினைத்தாலே இன்னல்கள் போய்விடும் என்பது தமிழக மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை நிலைக்கவும், நாட்டில் தலைதூக்கும் அதர்மம் அழிந்து தர்மம் தழைக்கவும் புரட்சித் தலைவி அம்மாவின் பாதையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் தமிழக மக்களுக்கு நல்வாழ்த்துக்கள் என்று முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.