குடியரசுத் தலைவர் தேர்தலில் சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன் : கருணாஸ் பேட்டி

குடியரசுத் தலைவர் தேர்தலில் சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன் : கருணாஸ் பேட்டி

ஜூன் 23 ,2017, வெள்ளிக்கிழமை, 

சென்னை : குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ கூறினார்.

அதிமுக ஆதரவு எம்எல்ஏவான கருணாஸ் நேற்று சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்தில் அவரை சந்தித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

குடியரசுத் தலைவர் தேர்தலில் சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன்; உடல்நிலை சரியில்லாததால் முதலமைச்சர் நடத்திய இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக டிடிவியிடம் பேசவில்லை; மரியாதை நிமித்தமாக தினகரனை சந்தித்து பேசினேன்.

இவ்வாறு கருணாஸ் கூறினார்.