குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளித்த அ.தி.மு.க விற்கு பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளித்த அ.தி.மு.க விற்கு பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி

ஜூன் 23 ,2017, வெள்ளிக்கிழமை, 

சென்னை : குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளித்த அ.தி.மு.க  இரு அணிகளுக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்து உள்ளார்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு எல்லா தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கிணங்க அ.தி.மு.க ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருப்பதற்கு நன்றி. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் ஆதரவு தெரிவித்து இருப்பதை வரவேற்கிறேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.