குடும்ப பிரச்சினையில் சிக்கியுள்ள கருணாநிதியால் மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாது: ராமராஜன் பேச்சு

குடும்ப பிரச்சினையில் சிக்கியுள்ள கருணாநிதியால் மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாது: ராமராஜன் பேச்சு

திங்கள் , மார்ச் 07,2016,

பழனியில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க. சார்பில் நடத்தப்பட்டது. இதில் நடிகர் ராமராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:–

கடந்த 2011–ம் ஆண்டுக்கு முன்னர் அடையாளம் தெரியாமல் இருந்த விஜயகாந்தை எதிர்கட்சி தலைவராக உயர்த்தியவர் முதல்வர் ஜெயலலிதா. விஜயகாந்த் தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்த பிறகுதான் ஜெயலலிதாவின் அருமை அவருக்கு தெரியவரும்.

தி.மு.க.வில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என ஆளுக்கு ஒரு வழியில் செயல்படுகின்றனர். இதனால் கருணாநிதி குடும்ப பிரச்சினையில் சிக்கி தவிக்கிறார். குடும்ப பிரச்சினையை தீர்க்க முடியாத கருணாநிதி, மக்கள் பிரச்சினையை எப்படி தீர்ப்பார்? தமிழக மக்களின் முன்னேற்றத்தை தடுத்தவர் கருணாநிதி தான் என்றார்.

இவ்வாறு ராமராஜன் பேசினார்.