குமரி மாவட்டத்தில் நெல் அறுவடையில் அமோக மகசூல்: பாசனத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

குமரி மாவட்டத்தில் நெல் அறுவடையில் அமோக மகசூல்: பாசனத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

திங்கள் , பெப்ரவரி 01,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், பாசனத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2-ம் பருவ நெல் அறுவடையில் அமோக மகசூல் கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் பருவ நெல் சாகுபடி ஜுன் மாதத்திலும், 2-ம் பருவ சாகுபடி அக்டோபர் மாதத்திலும் தொடங்குகின்றன. தற்போது 2-ம் பருவ நெல் அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதா, பாசனத்திற்கு தேவையான தண்ணீரை உரிய நேரத்தில் திறந்துவிட உத்தரவிட்டதாலும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேவைப்படும் உரங்களை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ததாலும், இந்தமுறை அமோக விளைச்சல் கண்டுள்ளது. டி.பி.எஸ்-3, பொன்மணி ஆகிய ரகங்கள் அதிக மகசூல் அளித்துள்ளதால், மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். நாகர்கோவில், தேரூர், புத்தேரி, இறச்சகுளம், தாழக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் அறுவடைப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.