கும்பகோணம் மகாமக விழா ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை கூட்டம்

கும்பகோணம் மகாமக விழா ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை கூட்டம்

வெள்ளி, பெப்ரவரி 12,2016,

கும்பகோணம் மகாமக விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஆலோசனை நடத்தினார்.

கும்பகோணம் மகாமக ஏற்பாடுகள் குறித்து, தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், வேலுமணி கலந்து கொண்டனர்.

தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வா வர்மா, காவல்துறை தலைமை இயக்குனர் அசோக் குமார், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் பணிந்திர ரெட்டி, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் வீர சண்முக மணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.