குறைந்த கட்டணத்தில் இணைய சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார்

குறைந்த கட்டணத்தில் இணைய சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார்

செவ்வாய், மார்ச் 01,2016,

குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் இணைய சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார்.

அரசு கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிகவேக அகண்ட அலைவரிசை சேவைகள் (Broadband Services)  மற்றும் இதர இணைய சேவைகள் (Internet Services) குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார்.

அதன்படி குறைந்த கட்டணத்தில் இணைய சேவை வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் ஜெயலலிதா தொடக்கிவைத்தார்.

இதன்படி ஆறு வகையான திட்டங்களின் கீழ் குறைந்த கட்டணத்தில் இந்த சேவை அளிக்கப்படும். குறைந்தபட்சமாக ரூ. 299 கட்டணத்தில் மாதந்தோறும் 2 ஜிபி அளவுக்கு இணைய சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். அதிகபட்சமாக ரூ. 899 கட்டணத்தில் 40 ஜிபி அளவுக்கு இணைய சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதுதொடர்பாக 1800 425 2911 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.