முதலமைச்சர் ஜெயலலிதா,கொடிநாள் நிதிக்கு 25 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்

முதலமைச்சர் ஜெயலலிதா,கொடிநாள் நிதிக்கு 25 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்

திங்கள் , டிசம்பர் 07,2015,

கொடிநாளையொட்டி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரிடம், கொடி நாள் நிதிக்கு 25 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எ. சுந்தரவல்லியிடம் கொடி நாள் நிதிக்கு நன்கொடையாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார். இந்த நிகழ்வின்போது, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ, பொதுத் துறை முதன்மைச் செயலாளர் திரு. யத்தீந்திர நாத் ஸ்வேன், பொதுத் துறை கூடுதல் செயலாளர் மற்றும் முன்னாள் படைவீரர் நல இயக்குநர் திரு. வெ. பழனிகுமார், முன்னாள் படை வீரர் நல கூடுதல் இயக்குநர் திரு. கர்னல் ஆர். அசோக் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.