கொள்கைக்கு முரணான வகையில் செயல்பட்ட கழக நிர்வாகிகள் கே..பாலசுப்பிரமணி மற்றும் லயன் எஸ். ரவிச்சந்திரன் நீக்கம்:முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

கொள்கைக்கு முரணான வகையில் செயல்பட்ட கழக நிர்வாகிகள் கே..பாலசுப்பிரமணி மற்றும் லயன் எஸ். ரவிச்சந்திரன்  நீக்கம்:முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

செவ்வாய், பெப்ரவரி 02,2016,

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கழக கொள்கை குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதால், வடசென்னை வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் திரு. K.பாலசுப்பிரமணி மற்றும் திரு. லயன் S. ரவிச்சந்திரன் ஆகியோர் கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வடசென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி கழகச் செயலாளர் திரு.K.பாலசுப்பிரமணி, பெரம்பூர் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. லயன் S. ரவிச்சந்திரன் ஆகியோர் இன்றுமுதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.