கொள்கை–குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் தஞ்சாவூர், திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை

கொள்கை–குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் தஞ்சாவூர், திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை

செவ்வாய், டிசம்பர் 01,2015,

 

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அ.தி.மு.க.வின் கொள்கை–குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அ.தி.மு.க. கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் எஸ்.மதியழகன், தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம், ஆரலூர் ஊராட்சி, ஆலவேலி ஆதிதிராவிடர் காலனி கிளைச்செயலாளர் ஆர்.வீரக்குமார், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம், வி புதுக்கோட்டை ஊராட்சி மினுக்கம்பட்டி கிளைச்செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணி என்ற பாக்கியராஜ் ஆகியோர் இன்று (நேற்று) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சி தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.