கோவையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 25,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர்:பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

கோவையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 25,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர்:பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

திங்கள் , ஜனவரி 11,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, கோவையில் நடைபெற்ற பிரம்மாண்டமான வேலைவாய்ப்பு முகாமில், 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணிக்கு தேர்வு செய்தன. தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டன. முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அவர்கள் அனைவரும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், முதலமைச்சர் ஆணையின்பேரில், சிறப்பு பேருந்துகள், குடிநீர், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, தமிழகத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில், அரசுப் பணிகளில் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வளரும் தலைமுறையினரின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கி வருகிறது. அரசுப் பணிகளைப் போல தனியார் நிறுவனங்களிலும் இளம்தலைமுறையினருக்கு அதிக அளவு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை, தருமபுரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஏற்கெனவே நடைபெற்ற பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்களில், லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்றனர். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க 5-ம் கட்டமாக, கோவையில் நேற்று, பிரம்மாண்டமான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. கோவை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வேலைவாய்ப்பு பதிவிற்காக அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது பெயர்களை பதிவு செய்தனர். இவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களிடம், இம்முகாமில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நேர்முகத் தேர்வு நடத்தின.

தொழில்நுட்பத்துறை முதல் தையல் தொழில் வரை, ஏராளமான பணிகளுக்கு நடத்தப்பட்ட நேர்காணலில், பல்வேறு கல்வித் தகுதிகள் பெற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள் திரு. ப. மோகன், திரு. P. தங்கமணி, திரு. S.P. வேலுமணி ஆகியோர் பணி ஆணைகளை வழங்கினர்.

இம்முகாமில் பங்குகொண்ட மேலும், 11,500 பேருக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட 11 திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் சார்பில், 2 மாத பயிற்சி வழங்கப்பட்டு, வேலைவாய்ப்புத்துறை சார்பில் பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில், தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்ட அனைவரும் தங்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்களின் வசதிக்காக, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முகாமில் பங்கேற்ற 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு, குடி தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.