சசிகலா குடும்பத்தினரை நீக்கும் வரை அ.தி.மு.க. 2 அணிகளும் இணைவதற்கு சாத்தியம் இல்லை : மாஃபா பாண்டியராஜன்

சசிகலா குடும்பத்தினரை நீக்கும் வரை அ.தி.மு.க. 2 அணிகளும் இணைவதற்கு சாத்தியம் இல்லை : மாஃபா பாண்டியராஜன்

ஜூன் 09, 2017,வெள்ளி கிழமை,

சென்னை : அ.தி.மு.க.வில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்பொழுது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்…

கேள்வி:– அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனே தொடருவார் என்று அமைச்சர்கள் கூறிவருகிறார்களே. அது பற்றி உங்கள் கருத்து என்ன?.

பதில்:– நாங்கள் அதை ஏற்கவில்லை. பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது தவறு என்பது எங்களின் நிலைப்பாடு. அவரால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களுடைய நிலைப்பாடு இதுதான். என்றைக்கும் இது நான் எங்களது நிலைப்பாடு.

கேள்வி:– சசிகலா குடும்பத்தினரை கட்சிப் பதவியில் இருந்து நீக்காமல், அ.தி.மு.க. 2 அணிகளும் இணைவதற்கான சாத்தியம் இல்லையா?.

பதில்:– கண்டிப்பாக இல்லை. 

இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் கூறினார்.