சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கே வெற்றி வாய்ப்பு : நியூஸ் 7 கருத்துக்கணிப்பு

சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கே வெற்றி வாய்ப்பு : நியூஸ் 7 கருத்துக்கணிப்பு

ஞாயிறு, ஜனவரி 10,2016,

2016 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, நியூஸ்7 தொலைக்காட்சி, லயோலா கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில், அதிமுகவிற்கு அதிக செல்வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, வரும் சட்டசபை தேர்தலில் எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்கிற ரீதியில் பொதுமக்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று 42.13 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.