சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெற இன்றும் தலைமைக் கழகத்தில் குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்

சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெற இன்றும் தலைமைக் கழகத்தில் குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளபடி, சென்னையில் உள்ள தலைமைக் கழகத்தில், விண்ணப்பப் படிவங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டி, தொடர்ந்து ஏராளமானோர் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா, ஏற்கெனவே அறிவித்துள்ளபடி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல்களில், கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள், கடந்த 20-ம் தேதிமுதல், சென்னை, தலைமைக் கழக அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கி வந்தனர்.

இந்நிலையில், விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, பூர்த்திசெய்து அளிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, தொண்டர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர். இளைஞர்கள், பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், இளம் பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திறமையான நிர்வாகம் மற்றும் பல்வேறு சாதனைத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பி, விருப்ப மனு அளிப்பதாக இளம்பெண்களும், இளைஞர்களும் தெரிவிக்கின்றனர்.

சென்னை தலைமைக் கழகத்தில் இன்றும் பெருந்திரளான கழகத் தொண்டர்களும், பல்வேறு அமைப்பினரும் திரண்டுள்ளனர். அவர்கள் மிகுந்த ஆர்வத்தோடும், எழுச்சியோடும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர். முதலமைச்சர் செல்விஜெயலலிதா, தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டி தொடர்ந்து ஏராளமானோர் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.