சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வரலாற்றுச் சாதனையை படைக்கும்: இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு. தமிழரசன்

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வரலாற்றுச் சாதனையை படைக்கும்: இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு. தமிழரசன்

திங்கள் , மார்ச் 07,2016,

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வரலாற்றுச் சாதனையை படைக்கும் என்றார், இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன் எம்எல்ஏ.

தருமபுரியில் செய்தி யாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் மேலும் கூறியதாவது;

நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றிக்காக பிரசாரம் மேற்கொள்வோம். மாநில அரசு அதிக கடன் வாங்கி விட்டதாக பாமகவினர் தொடர் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கின்றனர். இது அறியாமை. மத்திய அரசின் கடன் வழிகாட்டுதல்களை மீறி மாநில அரசு எந்தக் கடனையும் அளவுக்கு அதிகமாக வாங்கிவிட முடியாது என்றார் செ.கு. தமிழரசன்.