முதலமைச்சர் உத்தரவுப்படி, நாகை மாவட்டத்தில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு சுமார் 15 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கும் பணி தொடங்கியது

முதலமைச்சர் உத்தரவுப்படி, நாகை மாவட்டத்தில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு சுமார் 15 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கும் பணி தொடங்கியது

திங்கள் , பெப்ரவரி 01,2016,

கடந்த நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ளத்தால் நாகை மாவட்டம் சீர்காழியில், விளைநிலங்கள் தண்ணீரால் சூழப்பட்டு சேதமடைந்தன. இதில் சீர்காழி தாலுகாவில் 11 ஆயிரத்து 84 ஹெக்டேர் சாகுபடி பரப்பில் பயிர்கள் சேதமடைந்ததாக கணக்கிடப்பட்டு, வெள்ள நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதன்படி, சீர்காழியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கிகள் மூலம் 23 ஆயிரம் விவசாயிகளுக்கு சுமார் 15 கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அகனி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வெள்ள நிவாரணம் வழங்கும் பணி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

வெள்ள நிவாரண உதவித்தொகை பெற்றுக் கொண்ட விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.