சந்திரபிம்பம் வளருவது போல உடல் நலம் தேறி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா : நாஞ்சில் சம்பத்

சந்திரபிம்பம் வளருவது போல உடல் நலம் தேறி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா  : நாஞ்சில் சம்பத்

திங்கள் , அக்டோபர் 17,2016,

சென்னை: மருத்துவர்களின் சிகிச்சையால் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லண்டன் மருத்துவருடன் எய்ம்ஸ் மருத்துவக்குழுவும் இணைந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிங்கப்பூரிலிருந்து பிஸியோதெரபி மருத்துவர்களும் அப்பல்லோவுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை புரிந்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதா லண்டன் மற்றும் எய்ம்ஸ், அப்பல்லோ மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் குணம் அடைந்து வீடு திரும்புவார் என்றும், சந்திரபிம்பம் வளருவது போல ஜெயலலிதா உடல்நிலை தேறிவருகிறது என்றும் கூறினார்.