சமத்துவ மக்கள் கட்சி அ.இ.அ.தி.மு.க.வுக்கு, ஆதரவு : முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த பின் சரத்குமார் அறிவிப்பு

சமத்துவ மக்கள் கட்சி அ.இ.அ.தி.மு.க.வுக்கு, ஆதரவு : முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த பின் சரத்குமார் அறிவிப்பு

புதன், மார்ச் 23,2016,

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதாவை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் திரு. ஆர். சரத்குமார் நேரில் சந்தித்து, வரும் சட்டமன்றப் பேரவைத் பொதுத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.வுக்கு தனது கட்சியின் முழுமையான ஆதரவைத் தெரிவித்தார்.

வரும் மே மாதம் 16-ம் தேதி, சட்டமன்றப்பேரவை பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி. ஜெ ஜெயலலிதாவை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் திரு. ஆர். சரத்குமார் எம்.எல்.ஏ., இன்று நேரில் சந்தித்து, அ.இ.அ.தி.மு.க.வுக்கு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் தனது கட்சியின் முழுமையான ஆதரவைத் தெரிவித்தார் – அதற்கு, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதாக, அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது, தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சருமான திரு. ஆர். வைத்திலிங்கம், சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சருமான திரு. எடப்பாடி K.பழனிசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.