ஏழை – எளிய மாணவர்களும் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள அரசு புதிய மருத்துவக் கல்லூரி : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாணவர்கள் நெஞ்சார்ந்த நன்றி

ஏழை – எளிய மாணவர்களும் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள அரசு புதிய மருத்துவக் கல்லூரி : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாணவர்கள் நெஞ்சார்ந்த நன்றி

செவ்வாய், மார்ச் 08,2016,

ஏழை – எளிய மாணவர்களும் பயன்பெறும் வகையில், திருவண்ணாமலையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அதிநவீன முறையில் அமைத்துக் கொடுத்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அப்பகுதி மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது. எட்டாக்கனியாக இருந்த மருத்துவக்கல்லூரி படிப்பு சாதாரண மக்களுக்கும் கிடைக்கும் வகையில் புதிய மருத்துவக் கல்லூரியை அமைத்துத் தந்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாணவர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை நகரின் புறவழிச்சாலையில் கடந்த 2013-ம் ஆண்டு 35 ஏக்கர் நிலப்பரப்பில் 132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்தார். முதல் ஆண்டுக்கு 100 மாணவர்கள் என, கடந்த 3 ஆண்டுகளில் 300 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.

அதிநவீன வகுப்பறைகள், அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் ஒரே இடத்தில் பயிற்சி, அதிக வசதியுடன் கூடிய தங்கும் விடுதி, உணவகம், நூலகம், ஆய்வுக் கூடம் என தனித்தனி கட்டடங்களில் அதிநவீன முறையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது, மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உயர் சிகிச்சை பெற வேண்டுமென்றால், வேலூர், சென்னை, புதுச்சேரி போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்த நிலையில், தற்போது, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலேயே அதிநவீன சிகிச்சை கிடைப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிறப்பான வசதிகள் செய்து கொடுத்திருப்பதன் மூலம் நாள்தோறும் 3 ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.