சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 33 பேருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தலா ரூ.50,000 அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார்

சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 33 பேருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தலா ரூ.50,000 அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார்

ஞாயிறு, பெப்ரவரி 14,2016,

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 33 பேருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவியை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ வழங்கினார்.

மதுரை மாவட்டம், டி. கல்லுப்பட்டி அருகே சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் கடந்த 6-ஆம் தேதி நேரிட்ட விபத்தில் பலியான 16 பேருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்க உத்தரவிட்டார். அதன்படி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 33 பேருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ நேரில் சந்தித்து வழங்கி ஆறுதல் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கோபாலகிருஷ்ணன், டெல்லி சிறப்பு பிரதிநிதி, திரு. எஸ்.டி.கே. ஜக்கையன், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நிதியுதவியைப் பெற்றுக் கொண்டவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் மல்க நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.