சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

வெள்ளி, பெப்ரவரி 19,2016,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டப்பேரவையில் நேற்று  இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சியாச்சின் பகுதியில் கடந்த 3-ம் தேதி நிகழ்ந்த பனிச்சரிவில் உயிரிழந்த ராணுவ வீரர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த துயரச் சம்பவம் குறித்து தெரியவந்ததும் முதலமைச்சர்  ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, 4 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார். அதன்பேரில், வீரர்களின் குடும்பத்தினரை அமைச்சர்களும், கழக நிர்வாகிகளும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்தபடி, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர். இந்நிலையில், சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது. பேரவைத் தலைவர் திரு. தனபால், இரங்கல் தீர்மானத்தை வாசித்த பின்னர், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.