சுய உதவிக் குழுக்களுக்கு 20 ஆயிரம் ‘அம்மா’ அலைபேசிகள்: முதல்வர் அறிவிப்பு

சட்டசபையில் முதல்வரின் அறிவிப்பு: கடந்த, 1991ல் துவங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கை, தற்போது, ஆறு லட்சமாக உயர்ந்துள்ளது; இவற்றில், 92 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.இக்குழுக்களை இணைக்க, ஊராட்சி அளவில், கூட்டமைப்புகள் உள்ளன. ஒரு கூட்டமைப்பின் கீழ், 20 முதல், 25 குழுக்கள் உள்ளன.
Jayalalithaa_PTI
இவற்றை மேற்பார்வையிட, பயிற்றுனர்கள் உள்ளனர். புதிதாக சுயஉதவிக் குழுக்கள் அமைக்கவும், இவர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.குழு கூட்டங்கள், சந்தா தொகை செலுத்துதல், சேமிப்பு, உட்கடன் விவரம் மற்றும் கடன் வசூலிப்பு போன்றவற்றுக்கு, பதிவேடுகள் பராமரிக்க வேண்டியுள்ளது. குழு விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்தல், செயல்பாடுகளை மேற்பார்வையிடுதலுக்கு என, தமிழில் சிறப்பு மென்பொருள் உருவாக்கப்படும்; அதன் மூலம், கணினி மயமாக்கப்பட்ட அலைபேசிகள் ‘அம்மா’ அலைபேசி திட்டத்தில், சுயஉதவிக் குழு பயிற்றுனர்களுக்கு வழங்கப்படும். முதல் கட்டமாக, 15 கோடி ரூபாய் செலவில், 20 ஆயிரம் அம்மா அலைபேசிகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் அறிவித்தார்.