சென்னையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் – வெள்ளநீரை அகற்ற இரவு-பகலாக அதிகாரிகள், அமைச்சர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளாக அறிவிப்பு – அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் விஷமப் பிரச்சாரம் செய்வதாகவும் குற்றச்சாட்டு

சென்னையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் – வெள்ளநீரை அகற்ற இரவு-பகலாக அதிகாரிகள், அமைச்சர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளாக அறிவிப்பு – அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் விஷமப் பிரச்சாரம் செய்வதாகவும் குற்றச்சாட்டு

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுவீச்சில் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தேங்கியுள்ள மழை நீரை அகற்ற அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள், இரவு-பகல் பாராமல் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்குட்பட்ட, தண்டையார்பேட்டை இளையமுதலி தெரு, சேணியம்மன் கோயில் தெரு, எண்ணூர் நெடுஞ்சாலை, காரனேசன் நகர், எழில்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேரில் சென்று, பொதுமக்களை சந்தித்தார். பல்வேறு துறைகள் சார்பில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள மழை நிவாரணப் பணிகளை நேரில் பார்வையிட்டு, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் பொதுமக்களிடையே முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா உரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து, மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரம்பூர் – முத்தமிழ் நகர், கொளத்தூர் – இரட்டை ஏரி சந்திப்பு, வில்லிவாக்கம் – சிட்கோ நகர், அண்ணா நகர் – எம்.எம்.டி.ஏ காலனி, ஆயிரம்விளக்கு – ஜி.என்.செட்டி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேரில் சென்று மழை நிவாரணப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர், வடசென்னை பகுதியில் உள்ள ரெட்டேரி பகுதியில், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, அரசியல் ஆதாயத்திற்காக, எதிர்க்கட்சிகள் விஷமப் பிரச்சாரம் செய்வதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்குட்பட்ட, தண்டையார்பேட்டை இளையமுதலி தெரு, சேணியம்மன் கோயில் தெரு, எண்ணூர் நெடுஞ்சாலை, காரனேசன் நகர், எழில்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேரில் சென்று, பொதுமக்களை சந்தித்தார். பல்வேறு துறைகள் சார்பில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள மழை நிவாரணப் பணிகளை நேரில் பார்வையிட்டு, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். இதற்காக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு, சென்னை நகர மக்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.