சென்னையில், 334 மின்பகிர்மான பெட்டிகள், 106 கிலோ மீட்டருக்கு புதிய மின்கம்பிகள் அமைக்கும் பணி தீவிரம்:மழையினால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை

சென்னையில், 334 மின்பகிர்மான பெட்டிகள், 106 கிலோ மீட்டருக்கு புதிய மின்கம்பிகள் அமைக்கும் பணி தீவிரம்:மழையினால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை

செவ்வாய், டிசம்பர் 01,2015,

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களின் தாழ்வான பகுதிகளில், மழை நீர் தேங்கி இருப்பதால், அப்பகுதிகளில் உள்ள மின் பகிர்மான பெட்டிகளை, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, கூடுதலாக 3 அடி உயரத்தில் நிறுவும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை மற்றும் சுற்றுப்புறங்களின் தாழ்வான பகுதிகளில், மழை நீர் தேங்கியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, அப்பகுதிகளில் உள்ள மின் பகிர்மான பெட்டிகளை, கூடுதலாக 3 அடி உயரத்தில் நிறுவும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில், நந்தம்பாக்கம், மயிலாப்பூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை போன்ற பகுதிகளில் 334 மின்பகிர்மானப் பெட்டிகளை நிறுவி தமிழ்நாடு மின்சார வாரியம் சாதனை படைத்துள்ளது.

அதேபோல், இரண்டே நாட்களில் மொத்தம் 106 கிலோமீட்டர் தூரத்திற்கு, மாதவரம், பெரியார் நகர், ஸ்ரீதேவி நகர், வேளச்சேரி, ராமகிருஷ்ணா நகர், பள்ளிக்கரணை, கந்தன்சாவடி ஆகிய இடங்களில் புதிய மின் கம்பிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.