சென்னை திரும்பினார் முதல்வர்- கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு

சென்னை திரும்பினார் முதல்வர்- கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு

சென்னை: கோட நாட்டில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஜெயலலிதாவைகொட்டும் மழையிலும் அ.தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாகமாக வரவேற்றனர்.  முதலமைச்சர் ஜெயலலிதா , கடந்த அக்டோபர் மாதம் 14 ம்தேதி கோடநாட்டுக்கு பயணமானார். அங்கிருந்தவாறே அரசுப்பணிகளை மேற்கொண்டார். உயர்கல்வித்துறை, மின்துறை, பருவ மழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு அவ்வப்போது உரிய உத்தரவுகளை பிறப்பித்தார். ஆர்.கே.நகரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

சென்னை திரும்பிய முதல்வரை வரவேற்க விமானநிலையத்தில் கொட்டும் மழையிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர். அவர்களை கண்ட முதல்வர் ஜெயலலிதா, மலர்ந்த முகத்துடன் இரு விரல்களை காட்டி தொண்டர்களின் வரவேற்பை ஏற்றார். முதல்வரை கண்டதும் அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சியுடன் புரட்சித்தலைவி அம்மா வாழ்க என்று முழக்கமிட்டனர்.  இதைத்தொடர்ந்து காரில் போயஸ்கார்டன் வந்த முதல்வருக்கு அங்கு அ.தி.மு.க. தொண்டர்களும் மகளிர் அணியினரும் நூற்றுக்கணக்கில் கொட்டும் மழையில் திரண்டு நின்று உற்சாக வரவேற்பளித்தனர்.