சேலம் மாநகர் மாவட்ட செயலர் எம்.கே.செல்வராஜு நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சேலம் மாநகர் மாவட்ட செயலர் எம்.கே.செல்வராஜு நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, ஏப்ரல் 29,2016,

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலர் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ எம்.கே.செல்வராஜு நீக்கப்பட்டுள்ளார்.
 இதுகுறித்து, முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:- புதிதாக மாவட்டச் செயலர் நியமிக்கப்படும் வரை, மாவட்டப் பொறுப்பாளர்களாக, மேயர் எஸ்.சவுண்டப்பன், மாவட்ட அவைத் தலைவர் வி.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.