ஜல்லிக்கட்டு குறித்து பேச திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தகுதி இல்லை: சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் குற்றசாட்டு

ஜல்லிக்கட்டு குறித்து பேச திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தகுதி இல்லை: சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் குற்றசாட்டு

வியாழன் , ஜனவரி 21,2016,

சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி ஜல்லிக்கட்டு பற்றி பேசும் போது, குறுக்கிட்டு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய தாவது,

ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தமிழக சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர கோரிக்கை வைத்தன.

இதற்கு பதில் அளித்த பன்னீர்செல்வம், காளைகளை காட்சிப் பட்டியலில் இடம் பெற வைத்ததே மத்தியில் ஆட்சி செய்த திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிதான். எனவே, ஜல்லிக்கட்டு குறித்து பேச திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எந்த தகுதியும் இல்லை என்று குற்றம்சாட்டினார்.