ஜல்லிக்கட்டு தடைக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம்:மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றசாட்டு

ஜல்லிக்கட்டு தடைக்கு  திமுக, காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம்:மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றசாட்டு

வியாழக்கிழமை, ஜனவரி 21, 2016,

ஜல்லிகட்டு மீதான தடை என்பது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் திட்டமிட்டு கொண்டு வரப்பட்டதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜல்லிகட்டு நடத்தப்படுவதற்காக அரசாணை வெளியிட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டதாகக் கூறினார். மேலும், உச்சநீதிமன்றம் விதித்த தடை காரணமாக தான் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் ஜல்லிகட்டிற்கு தடை விதிக்க முழு காரணமுமே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான் என்று பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டினார். மேலும், தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால், இன்னும் இரண்டு நாட்களில் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.