ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி பெற்றுத் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி

ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி பெற்றுத் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி

திங்கள் , ஜனவரி 11,2016,

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி பெற்றுத்தந்தமைக்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், அதன் நிர்வாகிகள் இன்று, முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டுமென்று தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்திட மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் மூலம் அறிவிக்கையை வெளியிடச் செய்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி பெற்று தந்தமைக்காக, முதலமைச்சருக்கு, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத் தலைவர் திரு. பி. ராஜசேகரன் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்தச் சந்திப்பின்போது, நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. நத்தம் ஆர். விசுவநாதன், கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலச் செயலாளர் திரு. ஆர். நாராயணன், சிவகங்கை மாவட்ட மாநில துணைத் தலைவர் திரு. எஸ். செந்தாமரை உடையப்பன், சேலம் மாவட்ட மாநில துணைத் தலைவர் திரு. கே. குணசேகரன், புதுக்கோட்டை மாவட்ட மாநில துணை செயலாளர் திரு.வி.சி. ஜீலி, சிவகங்கை மாவட்ட தலைவர் திரு.கே.கே.ஆர்.எஸ். வேலுசாமி அம்பலம், மதுரை மாவட்ட பொறுப்பாளர் திரு.எஸ்.டி. சத்திய பிரகாஸ், விருதுநகர் மாவட்டத் தலைவர் திரு.எஸ். ராமசாமி, தேனி மாவட்டத் தலைவர் திரு. ஆர். ராமதராஜ், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் திரு. ஜெ. பிரிட்டோ டேவிட் தாஸ், திருச்சி மாவட்டத் தலைவர் திரு.எஸ். ராஜேந்திரன், திருச்சிராப்பள்ளி மாவட்டச் செயலாளர் திரு.எம். காத்தான், அரியலூர் மாவட்ட பொறுப்பாளர் திரு.ஏ. லூர்துசாமி, புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரு.ஏ.வி.எம். பாபு, வேலூர் மாவட்டத் தலைவர் திரு. வாசு, தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் திரு.ஆர். ராஜ்குமார், கோயம்புத்தூர் மாவட்டத் தலைவர் திரு.ஆர்.எஸ். திருமுகம், ஜல்லிக்கட்டு பேரவை உறுப்பினர்கள் பாலமேடு திரு.பி. காத்திகைராஜன் மற்றும் அலங்காநல்லூர் திரு.ஆர். கோவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவை நிர்வாகிகள், தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி பெற்றுத்தந்தமைக்காக நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர்.