ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதால் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம் – முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொது மக்கள் பாராட்டு

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதால் பட்டாசு  வெடித்து மக்கள் கொண்டாட்டம் – முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொது மக்கள் பாராட்டு

வெள்ளி, ஜனவரி 08,2016,

ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப்பட்டதையொட்டி, பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். தடையை நீக்குவதற்காக பெரும் முயற்சி மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நெஞ்சார்ந்த நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர முயற்சியைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை, வரவேற்று, ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெறும் அலங்காநல்லூர், வாடிப்பட்டி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.