ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்திற்கு,ராகவா லாரன்ஸ் மாணவர்களுடன் சென்று நன்றி

ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்திற்கு,ராகவா லாரன்ஸ் மாணவர்களுடன் சென்று நன்றி

திங்கட்கிழமை, ஜனவரி 30, 2017,

சென்னை: நேற்று முதலமைச்சர் திரு. ஒ. பன்னீர்செல்வத்தை, அவரது இல்லத்தில் ஜல்லிக்கட்டு தமிழ் உணர்வாளர்கள், திரைப்பட இயக்குநர் திரு. கௌதமன், நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் மாணவர்கள் சந்தித்து, தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தனர்.

முதலமைச்சர் திரு. ஒ. பன்னீர்செல்வத்தை, அவரது இல்லத்தில், ஜல்லிக்கட்டு தமிழ் உணர்வாளர்கள், திரைப்பட இயக்குநர் திரு. கௌதமன், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் திரு. பார்வைதாசன், திரு. பிரதிப்குமார், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மாணவர் திரு. அரவிந்த் ஆகியோர் சந்தித்து, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கிட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு விலங்குகள் வதைத் தடுப்பு திருத்த சட்டமுன்வடிவை நிறைவேற்றி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டமைக்காகவும், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு, உரிய பாதுகாப்பு அளித்தமைக்காகவும், தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

முதல்வர் சந்திப்பிற்கு பின்பு செய்தியாளர்களிடம் ராகவா லாரான்ஸ் கூறிகையில்,தான் முதலமைச்சரிடம் போராட்டத்தின் போது  கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு முதலமைச்சர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறினார் .