ஜல்லிக்கட்டு போட்டி பிரச்சினை:முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின்படி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு ‘கேவியட்’ மனு தாக்கல்

ஜல்லிக்கட்டு போட்டி பிரச்சினை:முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின்படி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு ‘கேவியட்’ மனு தாக்கல்

ஞாயிறு, ஜனவரி 10,2016,

ஜல்லிக்கட்டு நடத்துவதை தடுக்க முடியாத வகையில், சுப்ரீம் கோர்ட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு நேற்று ‘கேவியட்’ மனு தாக்கல் செய்தது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொடர் முயற்சி காரணமாக, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது. தமிழகம் முழுவதிலும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வரும் திங்கட்கிழமை மனு தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தலின்படி, தமிழக அரசு சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக, தமிழக அரசின் வாதங்களை உச்சநீதிமன்றம் கேட்க வேண்டும் என இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேவியட் மனுவை தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் திரு.யோகேஷ்கன்னா தாக்கல் செய்துள்ளார்.