ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் : அப்பல்லோ மருத்துவமனை புதிய அறிக்கை

ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் : அப்பல்லோ மருத்துவமனை புதிய அறிக்கை

செவ்வாய், அக்டோபர் 04,2016,

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை இன்று புதிய அறிக்கையை  வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது;

‘‘தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதுவரை வழங்கப்பட்டு வந்த சிகிச்சையே தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ குழுவின் கண்காணிப்பில் தொடர்ந்து இருந்து வருகிறார். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற முதல்வர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்’’.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.