ஜெயலலிதா பேரவை சார்பில்,தமிழக அரசின் மகத்தான சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் லட்சியப் பேரணி தொடங்கியது-லட்சக்கணக்கில் தொண்டர்கள் பங்கேற்பு

ஜெயலலிதா பேரவை சார்பில்,தமிழக அரசின் மகத்தான சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் லட்சியப் பேரணி தொடங்கியது-லட்சக்கணக்கில் தொண்டர்கள் பங்கேற்பு

புதன், ஜனவரி 06,2016,

தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் தமது பெயரில் செயல்பட்டு வரும் பேரவை சார்பில் நியமிக்கப்படும் ஒவ்வொரு வாக்கு சேகரிப்பாளரும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகளுடன் சென்று அப்பகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து, கழக அரசின் சாதனைகளை எடுத்துரைக்கவேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதற்கு இணங்க கழக நிர்வாகிகள், தமிழகம் முழுவதும் வாக்காளர்களை சந்தித்து கழக அரசின் சாதனைகளை விளக்கி வருகின்றனர்.

கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் தமது பெயரில் செயல்பட்டு வரும் பேரவை சார்பில் நியமிக்கப்படும் ஒவ்வொரு வாக்கு சேகரிப்பாளரும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடன் சென்று அப்பகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து, கழக அரசின் சாதனைகளை எடுத்துரைக்கவேண்டும் என ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, முதலமைச்சர் ஜெயலலிதா, ஏற்கெனவே விடுத்துள்ள அறிக்கையில், தமது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழக மக்களின் நல்வாழ்வு ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது என்றும், ஜனநாயக ஆட்சி முறையில் ஓர் அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் வாக்களிக்கும் மக்கள் ஒவ்வொருவரும் முழுமையாக தெரிந்துகொள்வது அந்த அரசுக்கு உறுதியும், பெருமையும் சேர்க்கும் என்பது மிகையல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் உள்ள 64 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட ஏறத்தாழ 5 கோடியே 62 லட்சத்து 6 ஆயிரத்து 547 வாக்காளர்களையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேரடியாக சந்திக்க, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாக்கு சேகரிப்பாளர் நியமிக்கப்பட்டு, கழக அரசு மக்கள் மேம்பாட்டிற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளையும், செய்து முடித்திருக்கும் சாதனைகளையும், அவற்றின் காரணமாக வரலாறு காணாத வளர்ச்சிப் பாதையில் தமிழகம் சென்றுகொண்டிருப்பதையும், முன் எப்போதும் காணாத முன்னேற்றப்பாதையில் தமிழகம் வெற்றி நடை போட்டுக்கொண்டிருப்பதையும் எடுத்துக்கூறுவது இன்றியமையாதது என்று கருதுவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இந்த மகத்தான பணியினை தமது பெயரில் செயல்பட்டு வரும் பேரவை மேற்கொள்ளும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடி வாரியாக, தமது பெயரில் செயல்பட்டு வரும் பேரவையின் சார்பில் நியமிக்கப்படும் ஒவ்வொரு வாக்கு சேகரிப்பாளரும், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகளுடன் சென்று, அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் எத்தனை முறை சந்திக்க இயலுமோ அத்தனை முறை சந்தித்து, கழக அரசின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஜெயலலிதா பேரவை சார்பில் சாதனை விளக்க பேரணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கித்தந்து, தமிழ் இனத்தை காத்துநிற்கும் தன்னிகரில்லா தலைவி முதலமைச்சர் ஜெயலலிதாவின் சரித்திர சாதனைகளை, கழக நிர்வாகிகள், வாக்காளர்களை நேரில் சந்தித்து தெரிவித்து வருகின்றனர்.

மாவட்டங்களில் பேரணி

அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க லட்சியப் பேரணி தமிழகம் முழுவதும் பெரும் எழுச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட ஐந்தரை கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களை சந்திக்கும் மகத்தான பணியை ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் கழக நிர்வாகிகள் இன்று தொடங்கியுள்ளனர். கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து வருகின்றனர்.

தென் சென்னை தெற்கு மாவட்ட சாதனை விளக்க லட்சியப் பேரணி எழுச்சியுடன் தொடங்கியது. அமைச்சர் திருமதி.பா.வளர்மதி தொடங்கி வைத்தார். 100 சதவீதம் முழுமையான வெற்றியை பெற்றிட வேண்டி நடைபெற்று வரும் மாபெரும் லட்சியப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

சென்னை தேனாம்பேட்டை பகுதியில், தென்சென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் பேரணி நடைபெற்றது. இளங்கோ தெருவில் தொடங்கிய பேரணியை, அமைச்சர்கள் திருமதி பா. வளர்மதி, திருமதி எஸ். கோகுல இந்திரா ஆகியோர் தொடங்கி வைத்தனர். கழக அமைப்புச் செயலாளர் திருமதி விசாலாட்சி நெடுஞ்செழியன் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஏராளமான தொண்டர்களும் இதில் பங்கேற்றனர். அனைவரும் வீதிகள் தோறும் பேரணியாக சென்று, வீடு வீடாக கழக அரசின் சாதனை விளக்க பிரசுரங்களை வழங்கினர்.

திருச்சியில் இன்று தொடங்கிய பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதேபோல், தமிழகம் முழுவதிலும் சாதனை விளக்க லட்சியப் பேரணி நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்தரத்தில் மாபெரும் எழுச்சி பேரணி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திரு. தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், ஏராளமான தொண்டர்களும் பங்கேற்றனர்.

கடலூர் மஞ்சக்குப்பத்தில், கடலூர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் பேரணி நடைபெற்றது. அங்குள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு, பேரணி தொடங்கியது. அமைச்சர் திரு.எம்.சி. சம்பத் பேரணியை தொடங்கி வைத்தார். கழக நிர்வாகிகளும், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர்.

கரூர் மாவட்டத்தில், கரூர்-கோவை சார்பில் லட்சியப் பேரணி தொடங்கியது. கழக கொள்கைப் பரப்புச் செயலாளரும், மக்களை துணை சபாநாயகருமான டாக்டர் மு. தம்பிதுரை பேரணியை தொடங்கி வைத்தார். அமைச்சர் திரு. தங்கமணி மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்தப் பேரணி, லைட்அவுஸ் கார்னர் ஜவஹர் பஜார் வழியாக சென்றது.

திருப்பூர் மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், கழக அரசின் மாபெரும் சாதனை விளக்கும் லட்சியப் பேரணி, புதிய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கியது. அமைச்சர் திரு. எம்.எஸ்.எம். ஆனந்தன் இதனை தொடங்கி வைத்தார். மாநகர மேயர் திருமதி விசாலாட்சி, கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.